மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: மேயர் பங்கேற்பு
இதர கோரிக்கைகள் வேண்டி 32 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 3 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 3 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 32 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.
இதில், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்களை கொடுத்தனர்.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் அஹமது இப்ராஹிம், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகேயுள்ள வீரவாஞ்சி தெருவில், சில மாதங்களாக தெருவிளக்குகள் எரிய வில்லை. இதுகுறித்து,மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை தெரு விளக்கு எரிய உரிய நடவடிக்கை இல்லையென, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.