மதுரை நகரில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் வேதனை

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 37 பேர் அனுமதிக்கப்பட்டனர்;

Update: 2023-09-14 08:30 GMT

பைல் படம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கடந்த  ஒரு  வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட   37 பேர் அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்

மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு அதிகமாக பாதித்து வருகிறது. மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 உயர்வு! ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவாமல், இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை நகரில் பெரும்பாலான தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

மதுரை அண்ணா நகர், வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, சௌபாக்யா விநாயகர் கோவில் தெரு மற்றும் வண்டியூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளில் கழிவுநீர் பீரிட்டு வெளியேறுகிறது. இதை மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து, கொசு உற்பத்தி தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News