ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-14 23:30 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும்,  மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு,  30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு வழங்கியபோது அருப்புக்கோட்டையில் தங்கி,  அங்குள்ள காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் கையெழுத்து போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போதைய விடுமுறைக்கு விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த கிராமத்திற்கு ரவிச்சந்திரன் செல்வார் என தெரிகிறது. இன்னும் ஓரிரு நாளில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டதுன்ம்  ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வருவார் என தெரிகிறது.

Tags:    

Similar News