மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹியம்மனுக்கு செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம்
வளர்பிறை பஞ்சமியையொட்டி, மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், மஹா யாகமும் நடைபெற்றது.இக் கோயிலில், மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமியன்று, வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.