மதுரை நகரில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?
கழிவு நீரானது ஆற்று நீரைப் போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் இந்த திறந்த வெளி கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்;
மதுரை தாசில்தார் நகர், மேலமடை 37-வது வார்டில் சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் பராமரிக்கப் படாமல், திறந்த வெளியில், பாதுகாப்பின்றி கழிவு நீர் கடத்தப்பட்டு வருகிறது.இந்த கழிவு நீர் திறந்த நிலையில் உள்ளதால், இப் பகுதி மக்கள் கழிவுகள், மாட்டு சானங்கள், குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருவதாகவும், இதனால், மழை காலங்களில், கழிவு நீரானது ஆற்று நீரைப் போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறதாம்.இந்த திறந்த வெளி கால்வாயை சீரமைக்க, இப் பகுதி குடியிருப்போர், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் கவனத்துக்கும் கொண்டு சென்றதாக பாஸ்கர் என்பவர் தெரிவித்தார். கழிவு நீர் கால்வாயை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.