மதுரையில் அக். 27-ல் வங்கி-வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது
வங்கிகள், விவசாயக்கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான "கடன் அனுமதிக் கடிதத்தை" சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்;
அனைத்து பொதுத்துறை தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கி மற்றும் கிராம வங்கி பங்கு பெறும் "வங்கி – வாடிக்கையாளர் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி மதுரை மடீட்சியா அரங்கத்தில், வருகிற 27.10.2021 (புதன்கிழமை)-அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை வங்கி மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நடைபெற இருக்கிறது.
விவசாயக்கடன், சிறுகுறு தொழில் கடன், வாகனக்கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் மற்றும் அடமானக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் வாடிக்கையாளர்கள் தேவையான தகவல்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு வங்கிகளும் தனித்தனியாக ஸ்டால்கள் அமைத்து செயல்பட இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அனைத்து வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். வங்கிகள், விவசாயக்கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான "கடன் அனுமதிக் கடிதத்தை" சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அளிக்க உள்ளனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.அனில் செய்து வருகின்றார்.