மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு புதிய வாகனங்கள்

மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு புதிய வாகனங்கள் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2024-02-16 12:03 GMT

மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய காம்பேக்டர் வாகனங்களை  மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள இரண்டு காம்பேக்டர் வாகனங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள் தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள்இ மணல்களை மட்டும் அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.8520001 மதிப்பீட்டில் புதிய இரண்டு காம்பேக்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள காம்பேக்டர் வாகனங்களை, மாண்புமிகு மேயர் இந்திராணி, ஆணையாளர், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி,முகேஷ்சர்மா, சுவிதா துணை ஆணையாளர் சரவணன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு உட்பட மாநகராட்சி அலுவலர்கள் , பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News