மீனாட்சியம்மன் கோவில் நவராத்திரி விழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில், இன்று கோலாட்டம் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அக். 14.ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவில், தினசரி மாலை நேரங்களில், அம்மன், பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார்.
அதன்படி, முதல்நாளில் மீனாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்; இன்று மீனாட்சியம்மன், கோலாட்டம் அலங்காரத்தில் காட்சியளித்தார். எனினும், இன்று சனிக்கிழமை என்பதால், தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதேபோல், மதுரை அருகே மேலமடை, சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், புரட்டாசி சனி வாரத்தையொட்டி, லெட்சுமி நாராயணர், வராஹியம்மன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.