மதுரையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை: செல்போன் பறிமுதல்
இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தாஜுதீன் கூறினார்;
மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 மணி நேர விசாரணைக்கு பின் செல்போனை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜுதீன் என்பவரை என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை அழைத்து சென்று காவல் கட்டுப்பாட்டு அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சென்ற பொழுது பீகாருக்கு சென்றபோது, சந்தேகத்துக்குரிய சிலரை கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜுதீனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 மணி்நேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்
இதனைத் தொடர்ந்து, முகமது தாஜூதீன் தான் பீகாரருக்கு செல்லாத நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.