தனி அதிகாரி நியமிக்கக்கோரி நாடார் மகாஜன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை நாடார் மகாஜன சங்கம் அதன் சார்பு நிறுவனங்களில், நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி மோசடி நடப்பதை தடுக்க கோரிக்கை;
மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடார் மகாஜன சங்கத்தினர்
தனி அதிகாரி நியமனம் செய்ய வலியுறுத்தி நாடார் மகாஜன சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை நாடார் மகாஜன சங்கம் அதன் சார்பு நிறுவனங்களில், நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி மோசடி நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் தனி அதிகாரியை நியமிக்க வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், வரவேற்றார்.முன்னாள் தலைவர் நாடார் மகாஜன சங்கம் முத்துசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு நாடார் பேரவை என் ஆர் தனபாலன், தலைவர் நாடார் பேரவை எர்ணாவூர் நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கம் பொதுச்செயலர் பெரீஸ் பி. மகேந்திரவேல், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.