மதுரையில் மர்ம கும்பலால் இளைஞர் வெட்டி படுகொலை: போலீஸ் விசாரணை

மதுரையில் மர்ம கும்பலால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-15 11:24 GMT

கொலை சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீசார்.

மதுரை மேலவாசல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெபமணி (வயது 32) என்பவர் மீது கொலை கொள்ளை உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியில் வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று இரவு தன் மகளின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஜெபமணியின் பின்ங்கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவத்தை போலீசார் ஜெபமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தான் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News