மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு ஒப்படைக்க எம்.பி.எதிர்ப்பு
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு ஒப்படைக்க வெங்கடேசன் எம்.பி.எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.;
மதுரையில் ரயில்வே மைதானத்தை தனியாரிடம் ஒப்படைக்க வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை, தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான, மதுரை அரசரடி விளையாட்டு மைதானம், மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி, மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு, மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி என பலரும் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.
இது குறித்து, மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறியதாவது:-
அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும். மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்க நினைத்தால், பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு சொந்தமான பல இடங்கள் இது போல் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு காரணமாக சில இடங்களில் மட்டும் இது போல் நடந்து விடுகிறது. ஆதலால் இதுபோன்ற செயல்களுக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் இருந்தால் மட்டுமே தனியாருக்கு ஒப்படைப்பதை தடுக்க முடியும்.