ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை நாட்டுக்கு தந்தவர் மோடி: பாஜக தேசிய செயலர்

பிரதமருக்கு மட்டுமல்ல நாட்டிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு அவமானமாகும்;

Update: 2022-01-06 09:00 GMT

மதுரையில் பாஜக தேசியச்செயலர் ரவி

ஒரே நேரத்தில், 11 மருத்துவக் கல்லூரிகளை புதியதாக நாட்டுக்கு அர்ப்பணித்தவர் இந்திய பிரதமர் மோடி என பாஜக பொதுச் செயலாளர் ரவி தெரிவித்தார்.

மதுரையில் காந்தி பார்த்த காதி கிராப்டை பார்வையிட்ட  பின்னர் அவர் பேசியது: பாரதப்பிரதமர் பஞ்சாப் சென்றபோது,   நடந்த சம்பவம்  மிகவும் கண்டனத்திற்குரியது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடந்துள்ளது .இது நாட்டின் பிரதமரை பாதுகாப்பில் உள்ள அலட்சியத்தை காட்டுகிறது.

இந்த அலட்சியத்துக்கு யார் பொறுப்பு.  பஞ்சாப்பில் உள்ள மாநில அரசு பொறுப்பாகும் .ஒரு பிரதமர் மாநிலத்திற்கு வரும்போது, பிரதமருடைய பயணத்திட்டம் செல்லும் பாதை ஆகியவை அனைத்தும் ஒரு மாநிலத்தின் பொறுப்பாகிறது. காங்கிரஸ் இந்த வகையில் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது.

இது பிரதமருக்கு மட்டுமல்ல நாட்டிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு அவமானமாகும். தேர்தலின்போது, மதுரை வந்த பிரதமர் அவர்கள் உங்கள் நண்பன் என்று கூறினார். அதேபோல, தற்போது எந்த அரசாங்கமும் இது வரை ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்ததில்லை. அவர் இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களின் நண்பன் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக அவர் எப்பொழுதும் துணை இருப்பார் எனக் கூறினார்.

Tags:    

Similar News