மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர் வாக்கு சேகரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்துஅ மைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;

Update: 2024-03-28 06:57 GMT

வைகை ஆற்றை வணங்கி மலர்கள் தூவி பிரச்சாரத்தை தொடங்கி,வாக்கு சேகரித்த அமைச்சர்.

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

வைகை ஆற்றை வணங்கி மலர்கள் தூவி பிரச்சாரத்தை தொடங்கி சிம்மக்கல் பகுதி (50-ஆவது வார்டு) காசி விஸ்வநாதர் கோவில், தைக்கால் - 1 முதல் 3 வரையிலான தெருக்கள், எல்.என்.பி.அக்ரஹாரம், அனுமார் கோவில் படித்துறை, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, ஆறுமுகச்சந்து. 55-ஆவது வார்டு பூந்தோட்டம், மடம் சந்து - கீழ அண்ணாத் தோப்பு, ராஜாமில் ரோடு, மணிநகரம் மெயின்ரோடு, கிருஷ்ண ராயர்புரம் தெப்பக்குளம், மேலமாசி - வடக்குமாசி வீதிகள் சந்திப்பு. 51-ஆவது வார்டு கருகப்பிள்ளைக்காரத் தெரு தளவாய் அக்ரஹாரம், வடக்குமாசி வீதி, வடக்கு வெளி வீதி. ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்

சென்ற இடங்களில், எல்லாம் அலை கடலென திரண்டு வரவேற்பு அளித்த பொதுமக்களுக்கு மத்தியில் வாக்கு சேகரித்து உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எப்போதுமே மதுரை மத்திய தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. வரக்கூடிய தேர்தலிலும் அதனை தொடரும் வகையில் நமது செயல்பாடுகள் அமையும் என்றார்.

Tags:    

Similar News