மதுரையில் மினி வேன் டிராவல்ஸ் உரிமையாளர் தாக்குதல்: ஒருவர் கைது

மதுரையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-02-28 09:00 GMT

பைல் படம்

கரிமேட்டில் மினிவேன் டிராவல்ஸ் உரிமையாளர் மீது தாக்குதல்ஒருவர் கைது :

மதுரை செல்லூர் அஹிம்சாபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி(41 ).இவர் மினி வேன் டிராவல் சர்வீஸ் செய்து வருகிறார். இதனால், தினமும் முரட்டன்பத்திரியிலிருந்து அன்பு நகர் செல்வது வழக்கம். இந்த நிலையில் ஏற்கெனவே மது அருந்துவது தொடர்பாக வாலிபர்கள் சிலரிடம் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.சம்பவத்தன்றும் அவர் தன்னிடம் வேலை செய்யும் ஊழியருடன் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த முரட்டன்பத்திரியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரேம்குமார் அவருடைய சகோதரர் சேசுபாண்டி இருவரும் அவரை கல்லாலும் கத்தியாலும் தாக்கி உள்ளனர்.இந்த தாக்குதல் குறித்து தங்கபாண்டி கரிமேடு போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் பிரேம்குமாரை கைது செய்தனர் தப்பி ஓடிய அவரது சகோதரர் சேசு பாண்டியை தேடி வருகின்றனர்.

ஜெய்ஹிந்த்புரத்தில் குடும்ப பிரச்சனையில் தந்தை மீது தாக்குதல்-மகன் கைது:

மதுரை,ஜெயந்த்புரம் ஜீவா நகர் இரண்டாவது தெரு இருதயநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன்(72 ).இவருடைய மகன் மணி ராஜா. இவர்கள் குடும்பத்தில் மணி ராஜாவின் சகோதரி திருமணம் விசயத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடும் மனவர்த்தமும் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த மகன் மணிராஜா கையாளும் கல்லாலும் தந்தை வாசுதேவனை தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து தந்தை வாசுதேவன் ஜெயந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் மணிராஜாவை கைது செய்தனர்.

கோவில் வசூல் தொடர்பாக முன் விரோதம் கோழிக்கடைக்காரரை தாக்கிய தந்தை மகன் கைது:

மதுரை, மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார்(46 ).இவர் கோழிக்கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கோவில் திருவிழாவை வசூல் செய்து நடத்தி உள்ளனர் .இந்த வசூல் தொகைக்கான் கணக்குகளை கேட்டு அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்( 42 )அவருடைய மகன் ஹரி ரஞ்சித்( 23 )இருவரும் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மதிச்சியம் தெற்கு தெருவில் சென்ற மகேஷ் குமாரை வழிமறித்த சுரேஷ், ஹரி ரஞ்சித் இருவரும் மீண்டும் கோயில் கணக்குகளை கேட்டு ஆபாசமாக பேசி அவரை தாக்கியுள்ளனர். ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர் இந்த சம்பவம் குறித்து மகேஷ் குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து சுரேஸ்,ஹரிரஞ்சித் இருவரையும் கைது செய்தனர்.

மதுரையில் செல்போன்கள் வழிப்பறியில் ஈடுபட்ட  நான்கு பேர் கைது :

மதுரை, எம்.கே.புரம் காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பாரத்(18.). இவர் அந்த பகுதியில் ரயில்வே டிராக் அருகே ஒயின்ஷாப் அருகே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே வந்து இரண்டு பேர் அமர்ந்தனர். பின்னர் அவர்கள் நைசாக பாரத்திடம் இருந்த செல்போனை திருடிச் சென்றுவிட்டனர் ஆந்த திருட்டுகுறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் திருடிய சோலைஅழகுபுரம் நான்காவது தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் ஆனந்தராஜ்( 23 )என்பவரை கைது செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் வாலிபரிடம் கத்தி முனையில் செல் பறிப்பு:

எஸ்.எஸ்.காலனி சுப்பிரமணிய பிள்ளை தெருவை சேர்ந்தவர் பிரசன்னா(31 ).இவர் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மூன்று வாலிபர்கள் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர்.அவர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து பிரசன்னா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பரங்குன்றம் சாமியார் பிள்ளை சந்துவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வேல்முருகன் (22 ),கூடல் மலை தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் குமரேசன்(20 )ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


Tags:    

Similar News