மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி
செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட மினி மாராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.;
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட மினி மாராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (24.03.2022) சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மினி மாராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாட்டங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக,சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் புகைப்படக்கண்காட்சி கலைநிகழ்ச்சிகள் மாணவ மாணவிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டியை, மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்தார்கள். இந்த ஓட்டப்போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலிதளபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.