மதுரை மாநகராட்சி சார்பில் தொடர் மாரத்தான் ஓட்டம்
சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்
மதுரை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா தொடர் மாரத்தான் ஓட்டத்தை, மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா தொடர் மாரத்தான் ஓட்டத்தை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த மாரத்தான் ஓட்டம் ரேஸ்கோர்ஸ் மைதான சாலையில் இருந்து தாமரை தொட்டி பாஸ்போர்ட் அலுவலகம்,கோகலே ரோடு சாலை, பாண்டியன் ஓட்டல், மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை, டாக்டர் அம்பேத்கார் சாலை,மடீட்சியா அரங்கம், இராஜா முத்தையா மன்றம் வழியாக ரேஸ்கோர்ஸ் மைதானம் வந்தடைந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் மருத்துவர்கள் அனைத்து பொது சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ,சுமார் 420 நபர்கள் கலந்து கொண்டனர்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை 1922ல் நிறுவப்பட்டு அதன் நூற்றாண்டு விழாவானது ,மாநில அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி , நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில், மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மண்டலவாரியாக மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட இரத்ததான முகாமும் நடைபெற்றது.
தொடர்ந்து ஜோதியினை வரவேற்று கொண்டாடும் வகையில் பொது சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்கள் சுகாதார அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் மகப்பேறு உதவியாளர்கள் மருந்தாளுனர்கள் சுகாதார பணியாளர்களை கௌரவித்தல் மற்றும் மண்டல அளவில் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களும் மேயரால், வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ,துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அர்ஜீன்குமரர் துணைமேயர் தி.நாகராஜன் உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஸ்குமார், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் இகாளிமுத்தன், லெட்சுமி. சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ்,மண்டல மருத்துவ அலுவலர்கள் சாந்தி,கோதை, ஜீனத் ,சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் சிவசுப்பிரமணியன் ,சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நல்லுச்சாமி, மண்டல மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.