பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

மதுரை கோரிப்பாளையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2022-04-09 12:25 GMT

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மதுரை ஆரப்பாளையத்தில், மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டம் செய்தனர்  விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மக்கள் நீதி மய்ய மன்றத்தலைவர் அழகர் பேசினார் .

மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகி முத்துராமன்,மதுரை மாவட்ட செயலாளர் முனியசாமி, மெடிக்கல் ரமேஷ், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீல ராமன் குணா அலி, நாகேந்திரன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இப்போராட்டத்தில் ,கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மையத்தினர் , மத்திய அரசு ,பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க கோரி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News