மதுரை: ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு எச்சரிக்கை

ஒரு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர் அடுத்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண முடியாது என அறிவிக்கப்பட்டது;

Update: 2022-01-11 05:30 GMT
மதுரை: ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டி

  • whatsapp icon

மதுரையில் இன்று ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திட்டவட்டமாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு மாடு பிடி வீரர்கள் போட்டி நடைபெறும் களங்களில் ஒரு இடத்தில் மட்டுமே தங்களது திறமைகளை காட்டி காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல வேண்டும்.  ஒரு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர் அடுத்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண முடியாது என திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால்  மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்தும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News