மதுரையில் செய்தியாளர்கள் பணி பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டம்
Madurai Reporters Association Agitation தனியார் டிவி செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
Madurai Reporters Association Agitation
தனியார் டிவி தமிழ் செய்தி தொலைக்காட்சியில், கடந்த ஏழு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணிபுரிந்து வரக்கூடிய நேசபிரபுவை 20. குண்டர்கள் அறிவால், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கியதில் நேச பிரபுக்கு 62 இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தளங்களில் கண்டனங்கள் எழுந்து வர கூடிய சூழலில் ,
மதுரை செய்தியாளர் சங்கம், தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தமிழக அரசு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும், நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை ஆர்ப்பாட்ட முழக்கங்களாக எழுப்பினர்.
மேலும், மதுரை செய்தியாளர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வாயிலாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தில் "பத்திரிக்கை துறையினருக்காக பணி பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும், தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மட்டுமல்லாது, குற்றத்திற்கு பின்புலத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.