மதுரையில் பலத்த மழை : வீட்டின் தரைதளம் இறங்கியதால் பரபரப்பு

மதுரையில் பலத்த மழை பெய்த நிலையில், வீட்டின் தரைதளம் பூமிக்குள் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.;

Update: 2021-12-06 00:00 GMT

மழையால், பூமிக்குள் இறங்கிய வீட்டின் தரைதளம். 

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. பல இடங்களில் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சாலைகளில் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், அம்பாசிடர் லாட்ஜ் பின்புறம் உள்ள வீடு,  தரையை விட்டு சற்று கீழே இறங்கியது. இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால், இதுபோன்ற விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளதாகவும், தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News