மழையால் குளம் போல் மாறிய சாலைகள்- மதுரை மாநகராட்சி கவனிக்குமா?

சாலையில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2021-12-01 06:30 GMT

சாலையில் தேங்கியுள்ள மழை நீர். 

மதுரையில் சில நாட்களாக  நல்ல மழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.   குறிப்பாக, வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி வார்டு எண். 30, 31ஆகிய பகுதிகளான, மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், வீரவாஞ்சி பகுதி தெருக்களில் குளம் போல மழைநீர், கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தேங்கியுள்ள இதை மாநகராட்சியினர் அகற்ற முன்வர வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர். மேலும், மதுரை கோமதிபுரம், தாழைவீதி, திருக்குறள் வீதிகளில், கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்த நிலையில் திறந்தபடியே உள்ளது. இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி 30-வது வார்டு உதவி பொறியாளரின் கவனத்துக்கு இப்பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளதாகவும், எனினும் சீரமைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News