மதுரை மாநகர காவல் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா: போலீஸ் கமிஷனர் பங்கேற்பு

Madurai Police Dept Samathuva Pongal மதுரை மாநகர காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல்‌ விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-15 07:00 GMT

மதுரை மாநகர காவல் துறை சார்பில்சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

Madurai Police Dept Samathuva Pongal

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி உண்டு. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்த மாதத்திற்கு மகாபாரதத்துடன் தொடர்பு உண்டு. மகாபாரதப் போரில், அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தார் பீஷ்ம பிதாமகர். பீஷ்மர், அவருடைய தந்தையிடமிருந்து, தான் விரும்பும் நேரத்தில் உயிர் துறக்கும் வரனைப் பெற்றிருந்தார். தட்சிணாயன காலத்தில் இறந்தால் மறுபிறவி ஏற்படும் என்பதால், அவர் உத்தராயன வருகைக்காகக் காத்திருந்தார். உத்தராயனம் ஆரம்பித்த மகர சங்கராந்தியன்று அவர் மோட்சம் அடைந்தார். மகர சங்கராந்தியன்று உயிர் நீத்தவர்க்கு மறுபிறவி இல்லை. மோட்சம் அடைவர் என்று சொல்வார்கள். ஆகவே, தை பிறந்தால் மோட்சத்திற்கு வழி பிறக்கும்.

Madurai Police Dept Samathuva Pongal



வயல் வெளிகளில் பயிர்கள், பாதையை மறைத்து வளர்ந்திருக்கும். அறுவடை முடிந்தவுடன், வயல் வெளிகளில் பாதை தெரியும். மேலும், நல்ல விளைச்சல் கண்டு, அறுவடை செய்ததை விற்று, தனக்கும் குடும்பத்திற்கும் வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிலையை அடைகிறான் விவசாயி. இதன் காரணமாகவும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் கைகூட, இந்த பழமொழி உருவானது.

2024ம்‌ ஆண்டிற்கான பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில்‌ தல்லாகுளம்‌ காவலர்‌ குடியிருப்பு மற்றும்‌ திடீர்நகர்‌ காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில்‌ நடைபெற்ற பொங்கல்‌ விழாவினை, மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ முனைவர் ஜெ.லோகநாதன்‌, தொடங்கி வைத்தார்‌. மேலும்‌, காவல்‌ கட்டுப்பாட்டு அறை, விரல்ரேகைப்‌ பிரிவு, சைபர்‌ கிரைம்‌ மற்றும்‌ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய இடங்களில்‌ பொங்கல்‌ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவின்போது, பல்வேறு கலை நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடைபெற்றன. போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌, பரிசுகளை வழங்கி பாராட்டினார்‌. விழாவில்‌, காவல்‌ துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்‌. பொங்கல் விழாவின்போது, காவல்துறையினர்‌ தங்களது குடும்பத்தினருடன்‌ ஆர்வமுடன்‌ கலந்து கொண்டு போட்டிகளில்‌ பங்கேற்றனர்..

Tags:    

Similar News