மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மூலப்பத்திரம் தர மறுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

Update: 2021-12-23 01:29 GMT

தீக்குளிக்க முயன்ற லதா ஈஸ்வரி.

மதுரை தல்லாகுளம் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் லதா ஈஸ்வரி இவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அப்போது அவர் ஆடையில் மறைத்து வைத்து இருந்த மண்ணெண்ணை பாட்டிலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார். லதா ஈஸ்வரியே   தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீர் ஊற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர் .

அப்பொழுது லதா ஈஸ்வரி போலீசாரிடம் கூறியது மதிச்சியம் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் வீட்டுமனை பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்றதாக கடன் தொகையை திரும்ப செலுத்தி விட்டதாகவும் கூறினார். இந்நிலையில் கடன் திரும்ப செலுத்திய பின்பு தனது அடமானத்தில் வைத்த இடத்திற்கான மூல பத்திரத்தை கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூலப்பத்திரம் தரமறுத்த கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை மேற்கொண்டு தனது இடத்திற்கான மூல பத்திரத்தை மீட்டு கிரகோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற உள்ள எனக் கூறியுள்ளார் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News