மதுரை: கார் ஓட்டியவர் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சாவு
மதுரை அருகே கார் ஓட்டியவர் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.;
மதுரை கூடல் புதூர் மேம்பாலத்தில் கூடல்நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவர் தனது காரை செல்லூர் நோக்கி ஒட்டி வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது கார் கட்டுப்பாடின்றி சென்று முன்னே சென்ற அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களில் மோதியதில், ஆணையூரை சேர்ந்த சங்கர் என்பவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொடர்ந்து, காயம் அடைந்த நாகலட்சுமி உள்பட 2 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.