உ.பி. சாமியார் மீது மதுரை திமுக வழக்கறிஞர்கள் அணி காவல் ஆணையரிடம் புகார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை, வாளால் குத்தி தீவைத்து எரித்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2023-09-06 12:30 GMT

மதுரை நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த  திமுக வழக்கறிஞர்கள் அணியினர்

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து மிரட்டல் விடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட அயோத்தியா சாமியார் சீர் ராமச்சந்திரதாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனிடம் புகார் மனு அளித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவருக்கு ரூபாய் 10 கோடி பரிசளிப்பதாகவும், யாரும் கொண்டு வராத பட்சத்தில் அவரே தலையை சீவி விடுவதாக கூறிக்கொண்டே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை, வாளால் குத்தி தீயால் எரித்துக் கொண்டே ஒழிக ஒழிக என முழக்கமிட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாமி யாரின் இத்தகைய செயலால் தமிழ்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் மத இன கலவரத்தை தூண்டும் வகையில் தமிழ்நாடு மக்கள் இடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News