மதுரை மாவட்ட சிவன். முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா
மதுரை மாவட்ட சிவன். முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீபிரளயநாத சிவாலயத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி, அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் ஆகியோர் பால் ,தயிர் ,நெய், வெண்ணெய் இளநீர் சந்தனம் திருநீறு தேன் பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேன் கலந்த தினை மாவு பிரசாதமாக வழங்கப்பட்டது. எம். வி. எம் .குழும சேர்மன் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம்.மருது பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளமதி ,கணக்கர் பூபதி, உட்பட ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதே போல மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயத்திலும் மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும் சித்தி விநாயகர் ஆலயத்திலும் வர சித்தி விநாயகர் ஆலயத்திலும, மதுரை திருமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலும் அவனியாபுரம் மீனாட்சி ஆலயத்திலும் சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத சுவாமி ஆலயத்திலும், கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது .
அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன . இதற்கான ஏற்பாடுகளை ,ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.