மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள்

மதுரையில் நடைபெற்ற குற்ற சம்பவங்களின் தொகுப்பு;

Update: 2023-05-29 16:42 GMT

மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகியோர் அரிவாள் மற்றும் உருட்டு கம்புகளுடன் தயார் நிலையில் பரப்புபட்டி நெடுஞ்சாலை பகுதி முன்புதரில் மறைந்துள்ளனர். அப்பொழுது, பெருங்குடி காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் உதவியுடன் நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சாலையில் செல்லும் நபர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

அவர்களிடம் பயங்கரமான அரிவாள் மற்றும் உருட்டு கம்புகள் இருந்துள்ளது, உடனடியாக, நான்கு வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகிய நான்கு நபர்களை மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெருங்குடி காவல் நிலைய போலீசார் முன்கூட்டியே வழிப்பறி கொள்ளையர்களை பிடித்ததற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் யாதவ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

வாட்ச்மேன் தற்கொலை

மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் 63. இவர், புது ராம்நாடு ரோட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். பத்து நாட்களுக்கு முன்பு இவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது .இதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் மன உளைச்சலில் ஏற்பட்டு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வாட்ச்மேன் கிருஷ்ண பாண்டியனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டதில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து மற்றொரு வாலிபர் கைது:

மதுரை , கரும்பாலை கீழத்தெரு பால்பாண்டி மகன் விஸ்வா. கரும்பாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் முருகேசன் மகன் உதயா. இவர்கள், கரும்பாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்ற போது விசுவாவின் நண்பரிடம் உதயா சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த உதயா கத்தியால் விஸ்வாவின் நண்பரை குத்த முயன்றார். இதை தடுக்கமுயன்ற விஷ்வாவுக்கு, கத்திக்குத்து விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து, ‌விஸ்வா அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை குத்திய வாலிபர் உதயாவை கைது செய்தனர்.

குடிபோதையில் வீட்டின் பொருள்கள் சூறை: தட்டி கேட்ட தம்பி மீது தாக்குதல்:

மதுரை காமராஜர் சாலை சிந்தாமணியை சேர்ந்தவர் முருகேசன் மகன் நந்தீஸ்வரன் என்ற நந்தி 18 .இவருடைய அண்ணன் பாலசுப்பிரமணி என்ற பப்லு. பாலசுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக குடிபோதையில் வந்தவர் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாட முயன்றார் .

இதை தம்பி நந்தீஸ்வரன் தட்டி கேட்டார். இதனால், ஆக்கிரமடைந்தார் அண்ணன் தம்பியை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து நந்தீஸ்வரன் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தம்பியை தாக்கிய அண்ணனை கைது செய்தனர்.

ஹோட்டலில் ஓசி சாப்பாடு தட்டி கட்ட உரிமையாளர் மீது தாக்குதல்

மதுரை, காமராஜபுரம் மீனாட்சிபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் 40 .இவர் முனிச்சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். முனிச்சாலை இஸ்மாயில் வரும் 18ஆவது தெருவை சேர்ந்தவர் சுல்தான் மகன் சையது இப்ராகிம். இவர் ,தினமும் மணிமாறன் ஹோட்டலுக்கு சென்று பணம் கொடுக்காமல் ஓசியாக சாப்பிட்டு வந்தார். அவருடைய தம்பி கடைக்கும் சென்று பணம் கொடுக்காமல் சாப்பிட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதை, மணிமாறன் தட்டிக்கேட்கவே, ஆத்திரமடைந்த சையது இப்ராகிம் அவரை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து, மணிமாறன் தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார் .

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ,அவரை தாக்கிய சையது இப்ராஹீமை கைது செய்தனர்.

Tags:    

Similar News