மதுரை மாநகராட்சி தெருக்கள் சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக மாறிவரும் அவலம்

மேலமடை, வண்டியூர் ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் எந்த வித அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை என மக்கள் புகார்;

Update: 2021-11-16 06:30 GMT

மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் பகுதிகளில் தெருக்களில் கொட்டப்படும், கழிவுகள்:

மதுரை நகரில் தெருக்களில் குவியும் குப்பைகளால்  சுகாதார சீர்கேடு உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை 30-வது வார்டு, சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவாசிகள்  தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீரால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மேலமடை, வண்டியூர், கண்ணேந்தல், திருப்பாலை ஆகிய பகுதிகள் பல ஆண்டுகளாக ஊராட்சி மன்ற கட்டுப்பாட்டில் இருந்தது.மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யூம்போது, மேலமடை, வண்டியூர் ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் எந்த வித அடிப்படை பணிகளும் நடைபெறவில்லையென  சமூக ஆர்வலர் கனகபாண்டியன் தெரிவித்தார்.

மேலும், மழைகாலங்களில், கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுக்கும் நீரானது சாலைகளில் பரவி தெருக்களை மாசுபடுத்துகிறதாம்.ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம், இப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.அண்ணாநகர் யானைக்குழாய், வீரவாஞ்சி தெரு, மருதுபாண்டியர் தெருக்களில், குப்பைகளை கொட்ட பெரிய அளவில், தொட்டிகள் அமைத்து, சாலையில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதியில் தாழை வீதி குளம் போல காட்சியளிக்கிறது. உடனடியாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, இப்பிரச்னையைத் தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரியுள்ளனர்.

Tags:    

Similar News