மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்துக்கு செய்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு

பத்திரிக்கையாளர்கள் மேயர் அறை முன்பு குவிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

Update: 2022-05-11 08:15 GMT

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்துக்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டமானது, மேயர் இந்திராணி பொன்வசந்தம் நடைபெற்றது. கூட்டத்தில் ,துணை மேயர் நாகராஜன், ஆணையாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மதுரை மாநகராட்சி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயத்தில் பத்திரிகையாளர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது..சில பத்திரிக்கையாளர்கள் மேயர் அறையின் முன்பு குவிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News