மதுரை செய்திகள்: மாணவி தவறவிட்ட ஆவணங்கள், ஒப்படைப்பு, வரதட்சணை பிரச்னை

பேருந்து நிலையத்தில் மாணவி தவறவிட்ட ஆவணங்கள், ஒப்படைப்பு, வரதட்சணை பிரச்னையால் திருமணம் நிறுத்தம், மின்சாரம் தாக்கி மாநகராட்சி பிளம்பர் பலி;

Update: 2023-03-26 11:42 GMT

ஆரப்பாளையத்தில் வீடு புகுந்து சிறுமியை கடத்தி கத்தி முனையில் பலாத்காரம் செய்த வாலிபர் கைது 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடி மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் கார்த்திக் ராஜா 25. இவர் பெரத்தானியாபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து 16 வயது சிறுமியை கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார் .அவரை திருப்புவனத்தில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்று கத்திமுனையில் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். .இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் கார்த்திக் ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.


மாட்டுத்தாவணியில் தவறவிட்ட ஆவணங்களை மீட்டு மதுரை மாணவியிடம்ஒப்படைப்பு

மதுரையை சேர்ந்தவர் மாணவி ராஜலட்சுமி. இவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சென்றுள்ளார் . அப்போது அவருக்கு சொந்தமான மணிபர்ஸ் மாயமானது.இதை அறியாமல் அவர் சென்றுவிட்டார்.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தனது மனைவியை வெளியூருக்கு பயணம் அனுப்புவதற்காக மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் சென்றார். அப்போது பிளாட்பாரத்தில் ஓரமாக மணிப்பர்ஸ் ஒன்று அனாதையாக கிடந்ததைக்கண்டார். அது திருடர்கள் கையில் சிக்காமல் உடனடியாக மீட்டு மாட்டுத்தாவணி காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர சோழனிடம் ஒப்படைத்தார்.

அதை அவர் ஆய்வு செய்து பார்த்தபோது அதில்  பாஸ்போர்ட், ஆதார் கார்டு ,டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அடையாள அட்டைகளும் பணமும் இருந்தன .அது மாணவி ராஜலட்சுமியினுடையது என்று தெரியவந்தது. உடனடியாக அவர் தொலைபேசியில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு,  அவர் தொலைத்த ஆவணங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.அவற்றை வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி ராஜலெட்சுமி காவல்நிலையம் சென்று அவற்றைபெற்றுக்கொண்டார். 

வரதட்சணை பிரச்சனையால் திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் திடீர் நிறுத்தம்

வரதட்சணை பிரச்சனையால் திருமணம் நடக்க இரண்டு நாட்களே இருந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பாலை ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் நாராயணன். .இவரது மூத்த மகளுக்கும் விளாச்சேரி யாதவர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் ராம்குமார் என்ற பெரியசாமிக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயமானது. மார்ச் மாதம் 27ஆம் தேதி திருமண தேதி குறிக்கப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தன.

இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை திடீரென்று நிறுத்திவிட்டனர். இதனால் திருமணத்திற்கு இரண்டடே நாட்கள் இருந்த நிலையில் திருமணம் திடீரென்று நின்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை நாராயணன் தல்லாகுளம் அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து காவல்துறையினர்  மணமகன் ராம்குமார் மணமகனின் தந்தை பாஸ்கரன் தாயார் பஞ்சவர்ணம் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மணமக்களின் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



பூர்வீக சொத்து விற்கப்பட்டதால் விரக்தி,  வாலிபர் தற்கொலை

மதுரை பூசாரி தோப்புவை சேர்ந்தவர் மாரியப்பன் 57.குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்களின் பூர்விகா சொத்து விற்கப்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் மாரியப்பன் இருந்து வந்தார் .இந்த நிலையில் புது ராம்நாட் ரோட்டில் குடவுன் ஒன்றில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார்.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சாந்தி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாரியப்பனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மின்சாரம் தாக்கி மாநகராட்சி பிளம்பர் பலி

மதுரை உச்சபரம்புமேட்டை சேர்ந்தவர் பாண்டி அழகர் மகன் அழகுமணி 27. இவர் பிளம்பர் வேலை பார்த்து வந்தார். அவர் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவதன்று ரிசர்வ்லயன் அருகே பழைய கேட் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி முத்துலட்சுமி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து பிளம்பர் அழகுமணியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News