சாலை விபத்தில் முதியர் மரணம்
ஆட்டோவும் பைக்கும் அடுத்தடுத்து மோதியதில் முதியவர் மரணம்;
வலிப்பு நோய் வந்த ஆறு வயது சிறுமி உயிரிழப்பு.
செல்லூர் சத்தியமூர்த்தி மெயின் ரோடு பால்பாண்டி மகள் கமலதர்ஷினி 6.இவருக்கு வாய் பேச முடியாது. காதும் கேட்பதில்லை. இந்த நிலையில் திடீரென்று வீட்டில் வலிப்பு நோய் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தந்தை பால் பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து ,சிறுமி கமலதர்சனியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோவும் பைக்கும் அடுத்தடுத்து மோதியதில் முதியவர் மரணம்
மதுரை, வில்லாபுரம் ஜெயபாரத் சிட்டியை சேர்ந்தவர் வித்யானந்தன் 80. இவர் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியில் டூவீலர் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஆட்டோவும் பைக்கும் அடுத்தடுத்து அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நித்தியானந்தனின் மனைவி ரமீலா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் பைக் ஓட்டிச் சென்ற அழகப்பன் நகர் சேகர் மகன் சூர்யா 20 ஆட்டோ ஓட்டிச் சென்ற காமராஜர் தெரு வண்டியூரை சேர்ந்த முத்துக்குமார் 39 இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.