மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க பாஜக வலியுறுத்தல்
மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வலியுறுத்தி மனு அளித்தார்;
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மாவட்ட அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும், நிறைவடைந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் தலா 1.கோடி நிதியுதவி வழங்க வேண்டும், மாநகராட்சி பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் தலா 1.கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
அப்போது மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.