மதுரையில் முழு ஊரடங்கு: முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக, சாலைகள் வெறிச்சோடியுள்ளன; முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update: 2022-01-23 08:12 GMT

மதுரையில் தேவையின்றி திரிவோரை, போலீசார் விசாரித்து அனுப்பினர். 

கொரோனா-ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க, தமிழ்நாடு அரசு சார்பில் 3வது ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  மதுரை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . மேலும், 27 நிரந்தர சோதனைச் சாவடிகளில், மக்கள் யாரும் நடமாடுகிறார்களா,  வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனரா என்பது குறித்து சோதனை நடைபெறுகிறது.

அத்துடன், 80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் வைத்து வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து,  பின்னர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை நகரம், முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News