மதுரையில், எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்

Update: 2022-05-04 09:14 GMT

எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தேசவளர்ச்சியின் எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து இன்று 3.5 சதம் பங்குகள் விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மதுரை செல்லூர் எல்.ஐ.சி .கோட்ட அலுவலகத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் கூறுகையில், மத்திய அரசின் இம்முடிவு மிகவும் தவறானது, தேச நலனுக்கு எதிரானது என தொடர்ந்து வலியுறுத்திய பின்பும். அதையும் மீறி மத்திய அரசு பங்கு வெளியீட்டை கொண்டு வந்துள்ளது என கூறினர்.

பின்னர், மத்தியஅரசின் பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி  பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

Tags:    

Similar News