மதுரையில் சலவைக் கூடம் : மேயர் திறப்பு
சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் வைகை ஆற்று கரையோரத்தில் மரக்கன்றுகளை மேயர் நட்டு வைத்தார்;
மதுரை மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை கூடத்தினைமேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.43 வைகை தென்கரை பகுதி குருவிக்காரன் சாலை அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை கூடத்தினை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.
இந்த சலவை கூடத்தில், சுமார் 20 நபர்கள் சலவைப் பணியினை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சலவைப்பணிக்கு தேவையான ஒரு ஆழ்துளை கிணறுகள், துவைப்பதற்கு வசதியாக 8 குழாய்களும், 2 தண்ணீர் சேகரிப்பு தொட்டியும், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சலவை செய்த துணிகளை துவைத்து வைப்பதற்கு பாதுகாப்பு அறையும், தேவையான மின்விளக்குகள், மின்விசிறிகள் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள சலவைக்கூடத்தினை மேயர் திறந்து வைத்தார்.
மேலும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் வைகை ஆற்று கரையோரத்தில் மரக்கன்றுகளை, மேயர் நட்டு வைத்தார்கள் தொடர்ந்து, மண்டலம் 4 வார்டு எண்.86 வில்லாபுரம் மெயின் ரோடு பகுதியில் ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வார்டு எண்.88 அனுப்பானடி மெயின் ரோடு பகுதியில் ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டிலும் என, இரண்டு பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையினை, மேயர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வில்லாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேயர் நேரில் சென்று பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் மருந்துகள், பணியாளர்கள் வருகை பதிவேடு, நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, குருவிக்காரன் சாலை, கே.கே.நகர் ரவுண்டானா பகுதிகள், கோரிப்பாளையம் பகுதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மாவட்ட நீதிமன்ற வளாகம், ராஜா முத்தையா மன்றம் சந்திப்பு, அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை பகுதிகள், அவனியாபுரம் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் அகற்றி மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவணபுவனேஸ்வரி, சுவிதா நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் வரலெட்சுமி,திருமலை, சையது முஸ்தபா கமால், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் சந்தனம், சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், கோபால், விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், மாமன்ற உறுப்பினர்கள் போஸ் முத்தையா, பூமா, பாண்டீஸ்வரி, முத்துலெட்சுமி, லோகமணி, சையது அபுதாகீர், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.