குமாரம் அருள்மிகு சக்தி விநாயகர், காளியம்மன் ஆலய குடமுழுக்கு
அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தில், சக்தி விநாயகர், காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது;
அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தில், சக்தி விநாயகர், காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் அருகே, குமாரம் கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு சக்தி விநாயகர், காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவையொட்டி, கோயில் முன்பாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கடஸ்தாபணம், மகா வேள்விகள், பூர்ணாஹூதி, நாடி சந்தானம் ஆகிய பூஜைகளை, சிவாச்சாரியார் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.