வாடிப்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ஜூன் 3, 1924 - ல் பிறந்த முத்துவேல் கருணாநிதி இந்திய அரசியல்வாதி களுள் ஒருவர்;
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 100வது பிறந்தநாள் விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கி, மலர் தூவி மரியாதை செலுத்தி னார். ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் வரவேற்றார்.
இதில், கஜேந்திரன், ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயகாந் தன், பேரூர் அவை தலைவர் திரவி யம், சுந்தரபாண்டி, மணி,கலைஞர் தாசன் முரளி, வினோத், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில், பேரூர் துணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
ஜூன் 3, 1924 - ல் பிறந்த முத்துவேல் கருணாநிதி இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார்.
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகஸ்டு 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் வயதில் சென்னையில் காலமானார்.