மதுரை நகர திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக சார்பாக 2000பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2022-06-03 08:45 GMT

பிறந்த நாளையொட்டி மதுரையில் உள்ள  கருணாநிதி உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தனர்:

கருணாநிதி  பிறந்த நாளையொட்டி, மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள அவரின் முழு உருவச்சிலைக்கு, மாநகர் தெற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் கோ. தளபதி தலைமையில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.  

நிகழ்ச்சியில், மாநகர மேயர் இந்திராணிபொன்வசந்த், பொறுப்புகுழு உறுப்பினர்கள்  வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, சின்னம்மாள், ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பகுதிச்செயலாளர் மிசா பாண்டியன் ஏற்பாட்டில், அங்கு, 75வார்டு ஆண்டாள்புரம்  மகளிரணி உறுப்பினர் மகாலெட்சுமி, போஸ் மகன் மணிகண்டன், பிரியா ஆகியோரது திருமணம்   கருணாநிதி சிலை முன்பாக மாலைமாற்றி சுயமரியாதை  திருமணம் செய்து கொணடனர். தொடர்ந்து, தெற்கு மாவட்டம் சார்பாக 2000பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது. 

Tags:    

Similar News