காஞ்சிபுரம் டாஸ்மாக் ஊழியர் கொலை: மதுரையில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் டாஸ்மாக் ஊழியர் கொலை சம்பவத்தை கண்டித்து மதுரையில் டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ஓரகடம் ஊரில் டாஸ்மாக்கில் பணிபுரிந்த துளசிதாஸ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் தொழிலாளர் முன்னணி இணைப்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், கொலையாளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு அரசு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர்.