மதுரை மாநகராட்சி பகுதிகளில் அரசு இணைச் செயலாளர் ஆய்வு..!

மதுரை மாநகராட்சியில் “பல்வேறு திட்டப்பணிகள்” குறித்து சென்னை நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான்ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-28 10:33 GMT

மதுரை மாநகராட்சியில் “பல்வேறு திட்டப்பணிகள்” குறித்து சென்னை நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும், பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, சென்னை நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஷே அப்துல் ரகுமான், மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் இன்று (27.07.2024) ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி கண்ணனேந்தல் பகுதியில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வருகை பதிவேடு, பணிபுரியும் பணியாளர்களின் தினசரி பணி விவரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். கண்ணனேந்தல் சக்தி நகர் கற்பக விநாயகர் கோவில் தெரு பகுதியில், திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், நாகனாகுளம் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடத்தில் மட்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைகளை நேரில் பார்வையிட்டார். மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியில் தூய்மை பணிகள் குறித்து, வண்டியூர் கண்மாய் பகுதியில் அழகுபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ,வெள்ளைக்கல் பகுதியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரித்தல், பணிபுரியும் பணியாளர்கள், குப்பைகள் சேகரிக்கும் முறைகள், உரம் தயாரித்தல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டிட பணிகள், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும்..தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

.இந்த ஆய்வின்போது, ​​தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர், முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் பார்த்தசாரதி, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர்கள் பாக்கியலெட்சுமி,சுந்தரராஜன், சேகர், உதவி செயற்பொறியாளர் காமராஜ்,ஜெகஜீவன்ராம், உதவிப்பொறியாளர்கள் ரிச்சார்டு, அமர்தீப், முருகன், செல்வவிநாயகம், ஆறுமுகம்,சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிர மணியன், வீரன், சுகாதார ஆய்வாளர் திரு.அலாவுதீன்,ரமேஷ், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News