மதுரையில் வீட்டு பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

மதுரை வசந்த நகர் பகுதியில், வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.

Update: 2022-04-17 01:15 GMT

மதுரை வசந்த நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்.  இவர் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வெளியூர் சென்ற ஸ்ரீதர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் பீரோ அனைத்தும் உடைந்து சிதலமடந்த நிலையில் இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News