ஜெய்பீம் பட விவகாரம்: பழங்குடியின மக்கள் நூதன ஆர்ப்பாட்டம்
ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பாக பாம்புகளுடன் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மதுரை தல்லாகுளம் பகுதியில் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பு பாம்புகளுடன் எழிகளுடனும் பழங்குடியின மக்கள் ஆர்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குனர் தா,செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன் .லிஜோமொல், ஜோஸ் ,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாயம் மற்றும் அரசு காவல்துறை அதிகாரிகளால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து அப்பட்டமாக பேசியிருந்தது இதில் குறிப்பிட்ட காட்சியில் வரும் காலண்டர் வன்னியர்களின் குறியீடு என்று கூறிய அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் தொடர்ந்து ஜெய்பீம் படத்திற்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கடிதங்களையும் வெளியிட்டு வந்தனர்.
மேலும், படத்தின் இயக்குனர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இயக்குனர் எதார்த்தா மாகா நடைபெற்றது யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அப்படி யார் மனதும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பழங்குடியினர் கூட்டமைப்பின் சார்பில் பழங்குடியின மக்கள் இணைந்து பாம்புகள், எலிகள், தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவைகளை வைத்து நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பேசிய் கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டியுள்ளார். சூர்யாவுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் .சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில், அதற்கு காரணமாணவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் என்றும் தெரிவித்தார். இந்த ஆதரவுப் போராட்டம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.