மதுரை நகரில் ஜெயலலிதா பிறந்த தினம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
மதுரை நகரில் ஜெயலலிதா பிறந்த தின விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார்.;
மதுரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவானது, மதுரை நீதிமன்றம் அருகே கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அங்குள்ள உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து,அதிமுகவினர் மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான செல்லூர் கே ராஜூ மற்றும் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம் எஸ் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், மாவட்ட முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.