மதுரையில் மல்லிகை விலை குறைவு: கனகாம்பரம் விலை உயர்வு
மதுரையில் தொடர் மழையின் காரணமாக கனகாம்பரம் அதிக விலைக்கு விற்பனையானது.;
மதுரை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக , கனகாம்பரம் வரத்து குறைந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 1500 க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூபாய் 1200க்கு விற்கப்பட்டது. ஆனால் மாலையில் கிலோ ஆயிரம் ரூபாயாக குறைந்தது.
பிச்சி, முல்லை பூக்கள் மல்லிகைப் போட்டியாக கிலோ ரூபாய் 1200 விற்கப்பட்டது. செண்டுமல்லி கிலோ ரூபாய் 70-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூபாய் 150க்கு விற்பனையானது. மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் கனகாம்பர பூக்கள் வரத்து சந்தைக்கு குறைந்தது, எப்போதும் உச்சத்தில் இருக்கும் மல்லிகை பூ விலையை வீழ்த்தி கனகாம்பரம் ரூபாய்க்கு ₹1500-க்கும் விற்கப்பட்டது .
துளசி, அரளி, மரிக்கொழுந்து, சம்பங்கி பிற பூக்களின் விலையை வழக்கத்தை விட ரூபாய் 10 முதல் 20 வரை அதிகமாக விற்கப்பட்டது.