மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை விற்பனையா ? 3 பேர் மீது விசாரணை

குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது

Update: 2023-03-29 06:45 GMT

பைல் படம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை விற்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில்  மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையத்தில் சந்தேகப்படும்படியாக  வயதான பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற   காவல் ஆய்வாளர்  முத்துமாரிக்கு.  அந்த பெண்மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்தப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் வைத்திருந்தது பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தை என்று தெரிய வந்தது.அந்த குழந்தை யாருடையது என்று மேலும் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் கூறிய நிலையில், அவரது மகளை அழைத்து விசாரணை நடத்திய போது,  அந்தப் பெண் கூறியது பொய் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்தப் பெண்ணை மருத்துவமனை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டி, காக்காரம்பட்டி ஒத்தவீடு நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள்(60,)  கருப்பசாமி மனைவி பாண்டியம்மாள்(40,) இரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள், குழந்தையின் தாய் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிடிபட்ட பாண்டியம்மாள்(60,). அழகுபாண்டியம்மாள்(40,) மற்றொரு பாண்டியம்மாள்(40,) ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாலதி மற்றும் குழந்தையின் தாயை போலீசார் தேடி வருகின்றனர

மேலும் கடந்த சில நாட்களில் அரசு மருத்துவமனை அல்லாமல் வேறு ஏதும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள் ளதா,  அதன் நிலை என்ன என்பது குறித்தும்,  விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகத்துடன் காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை யாருடைய குழந்தை என்பது குறித்தான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Tags:    

Similar News