ஐப்பசி பௌர்ணமி: மதுரையில் சிவனுக்கு அன்னாபிஷேகம்
வைகை விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமியையொட்டி, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.;
மதுரை அண்ணாநகர், வைகை காலனி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமியையொட்டி, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று, சிவனை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் மற்றும் மகளீர் குழு பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல், மதுரையில் ஆவின் நகர் செல்வ விநாயகர் ஆலயத்திலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.