மதுரையில் சுயேச்சை வேட்பாளர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

மதுரையில் சுயேச்சை வேட்பாளர் வேலம்மாள், வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-11 11:15 GMT
சுயேச்சை வேட்பாளர் வேலம்பாள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 

மதுரை மாநகராட்சி புதிய 79வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக, வழக்கறிஞர் கேபிள் எ.எம். கண்ணன் மனைவி கே.வேலம்மாள் போட்டியிடுகிறார். அவருக்கு,  குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது.

அவர், வாக்கு கேட்டு தனது ஆதரவாளர்களுடன் ஜீவா நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது கணவர் கேபிள் கண்ணன் இரண்டு முறை கவுன்சிலராக இருந்து, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செயல்படுத்தி உள்ளார் என்பதை கூறி, பிரசாரம் செய்தார். இது, மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News