மதுரை அரசு மருத்துவமனையில் கட்டண மருத்துவ படுக்கைகள் பிரிவு திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக் கிணங்க மதுரை, கோவை, சேலம் ஆகிய 3 பெருநகரங்களில் இப்பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.;

Update: 2023-03-02 14:30 GMT

மதுரை அரசு மருத்துவமனையில், மருத்துவ கட்டண படுக்கைகள் வசதி தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில், மருத்துவ படுக்கை வசதி பிரிவுகளை  சுகாதாரத்துறை  அமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரைமாவட்டம்,அரசு இராசாசி மருத்துவமனையில் 16 கட்டண மருத்துவ படுக்கை வசதி பிரிவுகளைமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

மதுரை மாவட்டம்,அரசு இராசாசி மருத்துவமனையில் 16 கட்டண மருத்துவ படுக்கை வசதி பிரிவுகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில்,

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ரூபாய் 1 கோடியே 2 இலட்சம் மதிப்பீட்டில் கட்டண மருத்துவ படுக்கை வசதிகளுடன் கூடிய 16 அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவ சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மருத்துவமனை கட்டமைப்பு வசதிககளை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை, கோவை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் கட்டண மருத்துவ படுக்கை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்று அறிவிப்பு வெளியிட்டார்கள். கடந்த வாரம் முதற்கட்டமாக சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கட்டண மருத்துவ படுக்கை வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கட்டண மருத்துவ படுக்கை வசதிகளுடன் கூடிய 16அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரவு, தனி கழிவறை, தொலைக்காட்சி, தண்ணீர் கொதிகலன் வசதி, உதவியாளர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனி அறை ஒன்றுக்கு ரூபாய் 1200 கட்டணமும், சொகுசு அறை ஒன்றுக்கு ரூபாய் 2000 கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தனி அறைகள் கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் என்பது சென்னையில் ராஜுவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை கல்லூரியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, சென்னையில் இருக்கும் இவ்வசதியினை மற்ற மாநகரங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மதுரை, கோவை, சேலம் ஆகிய 3 பெருநகரங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இச்சேவை சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் இன்றைய தினம் இச்சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3-ஆம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையை பெரும் சாதனை படைத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே 3-ஆம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையில், மதுரை மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது. இதற்கான மருத்துவ பிரிவு ஜுலை-2021 திறந்து வைக்கப்பட்டது. 3-ஆம் பாலினத்தவர்கள் இந்த மருத்துவ சேவையை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

முற்காலத்தில் இவ்வகையான அறுவை சிகிச்சை பெறுவதற்கு தாய்லாந்து போன்ற வெளிநாடுகள் மற்றும் மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரத்தியேக வசதியினை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சிறப்பாக செய்து வருகிறது. இவ்வறுவை சிகிச்சையின் மூலம் தற்போது வரை 232 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவற்றில் 106 நபர்கள் திருநங்கைகள், 126 நபர்கள் திருநம்பிகள் என மொத்தம் 232 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்துள்ள மருத்துவமனையாக விளங்கி வருகிறது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இவ்வறுவை சிகிச்சையினை இலவசமாக செய்திட வேண்டுமென்ற தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க பாலின மாற்று அறுவை சிகிச்சை 110 நபர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில், 94 திருநம்பிகள் 16 திருநங்கைகள் என மொத்தம் 110 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் மூலம் செல்படுத்தப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு 180 நபர்களுக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டுமென்ற அறிவுறுத்தலுக்கிணங்க மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த மருத்துவமனைகளில் ரூபாய் 2 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், ஜெய்க்கான் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் கட்டடப்பணிகளை பொதுபணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யவுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் சிதிலமடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்ககளை 15-வது நிதிக்குழுவின் நிதியுதவியுடன் ஒவ்வொரு வருடமும் புதுப்பித்து மக்கள் பணி சேவைக்காக திறந்து வைக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராஜாக்கூர் ஊராட்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் 1 கோடியே 33 இலட்சம் மதிப்பீட்டில் வளையங்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆரம்பர சுகாதார நிலையம், இராஜாக்கூர், குமாரபுரம், எஸ்.கீழப்பட்டி, பெரியபூலான்பட்டி ஆகிய 4 பகுதிகளில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் 5 மருத்துவமனை கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். மேலும், இராஜாக்கூர் ஊராட்சியில், புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தையும் அரசுப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார்,  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் மரு. செல்வவிநாயகம், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை, கூட்டுறவு சங்கத்தலைவர் அ.ப.ரகுபதி, இராஜாக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் உமா சேங்கை , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News