மதுரையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து, பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-24 08:16 GMT

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து , பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்: நடந்தது.

மதுரை மாவட்டம், மூன்றுமாவடி பகுதியில்  ,தமிழக அரசின் மின் க ட்டண உயர்வை க், கண்டித்து மதுரை புறநகர் பாஜக சார்பாக தமிழக பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் தலைமையிலும், பா.ஜ.க. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன்  முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  மாநில பொதுச் செயலாளர் சந்தோஷ்,  வி .சுப்பிரமணியன். மாநிலச் செயலாளர் தியாகராஜன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் சி .பாஸ்கரன், ஊடகப் பிரிவு மாவட்டத்தலைவர் செல்வமாணிக்கம், விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவர் கே. செந்தில், ஓ பி. சி. பிரிவு மாவட்டத் தலைவர் மூவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்,  ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு,  பா.ஜ.க. அணியை  சேர்ந்த திரௌபதி முர்மு, இந்தியாவின் 15 வது  குடியரசு தலைவராக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக  மாநிலச் செயலாளர் தியாகராஜன் தலைமையிலும் , தமிழக பா.ஜ.க. விருந்தோம்பல் பிரிவு மதுரை மாவட்ட தலைவர் கே. செந்தில் , முன்னிலையிலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News